சம்பளத்தில் சூர்யாவை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்

Prabha Praneetha
3 years ago
சம்பளத்தில் சூர்யாவை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்

இன்றைய திகதிக்கு தமிழ் சினிமாவின் வசூல் நடிகர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த பத்து வருடத்தில் மட்டும் இவரது சினிமா வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. தனக்கு என்ன ஜானர் வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அதில் பயணம் செய்து தற்போது மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

கடைசியாக சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் முதல் 100 கோடி படமாக அமைந்தது. இதை முன்னணி நடிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் இவ்வளவு சீக்கிரத்தில் தங்களுடைய இடத்தை பிடிப்பார் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய சம்பளத்தில் உஷாராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு வெற்றிப்படங்கள் கொடுக்கும் போதும் சில கோடிகளை சேர்த்துவிடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் டாக்டர் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் உச்ச வெற்றியைப் பெற்றதால் தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி விட்டாராம். மறுபக்கம் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யாவின் சம்பளம்தான்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் இருக்கும் சூர்யாவுக்கு இப்போதுதான் 30 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் வந்துள்ளது.

ஆனால் சில வருடங்களிலேயே அவரது இடத்தை பிடித்து விட்டார் என்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஆக முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய்.

அவர்களை தொடர்ந்து அஜித் கமல் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இவர்களுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இருக்கின்றனர். 

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெளியானால் இன்னும் பல கோடி சம்பளம் அதிகம் வாங்கும் நிலைக்கு சூர்யா உயர்ந்து விடுவார் என்கிறார்கள் சூர்யா வட்டாரங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!