இன்றைய வேத வசனம் 11.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
இது ஒரு ஒலிம்பிக் போட்டியின் உச்சம்! 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்குத் தயாராகி, மின்னலைப் போல் பாய்ந்து செல்லக் காத்திருக்கும் ஆண்களின் அணி வரிசையில், அந்தத் துடிப்பான வாலிபன் Derek Redmond Barce lonaவே Derek Redmond டை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயம், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் விரைந்தனர் வீரர்கள்.
100 மீட்டர் தொலைவு வரை Derek எல்லோரைக் காட்டிலும் முன்பு ஓடிக் கொண்டிருந்தார். சடுதியில் அவர் வலது கால் தொடை சுளுக்க, வலியின் வேதனையில் சுருண்டுப் போனார்.
தன்னைத் தாண்டி அத்தனை வீரர்களும் ஓடிக் கொண்டிருக்க, சுளுக்கிய காலோடு மறுபடியும் ஓடத் துணிந்தார் Derek.
பலர் அவரை தடுத்தும் அவர் கேட்காமல் ஓட, சட்டென்று ஒரு வயதானவர் ஓடிவந்து Redmond ரோடு ஓட ஆரம்பித்தார்.
அவர் தான் Redmondயின் தந்தை ஜிம். மகனே போதும், நீ வலியோடே ஓட வேண்டாம், விட்டுவிடு என்றார்.
ஆனால் Red mond “ இல்லை ஓடுவேன் ” என்றார். அதற்குத் தந்தை அப்பொழுது சரி“ நாம் சேர்ந்து ஓடுவோம் ”என்று சொல்லி இரண்டு பேரும் சேர்ந்து 400 மீட்டர் ஓடி முடித்தார்கள்.
மனம் உடைந்த அந்த நேரத்தில் “வா சேர்ந்து ஓடுவோம்” என்ற தந்தையின் அந்த வார்த்தையே Redmondக்கு ஆறுதலாய் இருந்தது.
அந்த உண்மையான ஊக்கம் தான் Redmond யை முழு ஓட்டத்தையும் ஓடி முடிக்க வைத்தது.
இன்றைக்கு தங்கள் வாழ்க்கையின் பாதியில் ஓட்டத்தை நிறுத்தியவர்கள் உண்டு, திசை மாறியவர்கள் உண்டு, தடம்புரண்டவர்கள் உண்டு. அவர்களைப் பார்க்கும்போது வழக்கமான நம்முடைய செயல் என்ன?
பரியாசம் செய்வதும், குற்றப்படுத்துவதும், கேலி செய்வதுமே. ஆனால் இன்றைக்கு நம்முடைய சமூகத்திற்கு தேவை உண்மையான ஊக்கமூட்டும் வார்த்தைகளே.
தாவீது சோர்ந்துபோன போது, யோனத்தானின் ஊக்கமூட்டும் உண்மையான வார்த்தைகள் தான் அவனை பெலப்படுத்தித் தொடர்ந்து ஓட வைத்தது.
இன்றைக்கு நீங்கள் மற்றவரை உண்மையாக ஊக்கப்படுத்தினால், ஒருநாள் நீங்கள் சோர்ந்து போகும்போது நிச்சயமாக ஒரு கரம் உங்களை ஊக்கப்படுத்தும்.
கலாத்தியர் 6:2
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
ஆமென்!