இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து: 5 பேர் காயம்

#Accident
Prathees
4 years ago
இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து: 5 பேர் காயம்

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வெற்றிலை ஏற்றிச் சென்ற சிறிய லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார். மஹியங்கனை டிப்போவிற்கு சொந்தமான பஸ் மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணித்தபோதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4