போராட்டத்தின்போது உயிரிழந்த ஆசிரியைக்கு வடமாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

Reha
4 years ago
போராட்டத்தின்போது உயிரிழந்த ஆசிரியைக்கு வடமாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினைகோரி நடத்தப்பட்டடிருந்த போராட்டத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்காக வடமாகாண பாடசாலைகளில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கேட்டுள்ளது. 

யாழில் இன்று இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே ஆசிரியர் சங்கம் இதனை கேட்டுள்ளது. அண்மையில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்தவேளை திடீர் மாரடைப்பு காரணமாக மாத்தறை தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியரான வருணி அசங்கா அகாலமரணம் அடைந்தார்.

அவரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காலையில் 5 நிமிடங்கள்  அகவணக்கம் செலுத்தி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குமாறே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4