வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

Reha
4 years ago
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நேற்றைய தினம் மாலை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய ரஞ்சனுக்கு இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக அவர் வெலிகடை சிறைச்சாலையின் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4