லிவிங் டுகெதர் வாழ்க்கை ஓகே என்கிறார் ரைசா
#TamilCinema
Mugunthan Mugunthan
3 years ago
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்திற்கு பின் தற்போது எப்ஐஆர், சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இப்போது பிரபுதேவா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இணையதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடத்தில் ஒருவர், ‛‛லிவிங் டுகெதர் வாழ்க்கை'' குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு ‛‛எனக்கு ஓகே தான். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை வாழ பாய்பிரண்ட் வேண்டுமே, அப்படி ஒருவர் இல்லாத போது அந்த வாழ்க்கையை பற்றி எப்படி நான் நினைக்க முடியும், வாழ முடியும்'' என பதிலளித்துள்ளார் ரைசா வில்சன்.