முதல் தென் இந்திய நடிகை... சமந்தாவிற்கு கிடைத்த கௌரவம்!
கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றுவதற்கு நடிகை சமந்தா அழைக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கோவா சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி இந்தத் திரைப்பட விழா முடிவடையும்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடக்காமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடந்தது.
இந்த ஆண்டுக்கான 52 ஆவது சர்வதேச திரைப்பட விழா வழக்கம்போல நவம்பர் 20 ஆம் திகதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றுவதற்கு நடிகை சமந்தா அழைக்கப்பட்டு உள்ளார்.
இதன் மூலம் கோவா திரைப்பட விழாவில் பேசும் முதல் தென் இந்திய திரைப்பட நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
விவாகரத்துக்கு பின்னர் துவண்டு போய் கிடக்கும் சமந்தா தன்னை உற்சாகப்படுத்திக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவும் அவருக்கு கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.