பத்து தல ராவணனாக நடிக்கும் கோடீஸ்வர நடிகர்

Prabha Praneetha
3 years ago
பத்து தல ராவணனாக நடிக்கும் கோடீஸ்வர நடிகர்

 

இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாகும் திரைப்படம் ஆதி புரூஸ்.

மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.

இந்தத் திரைப்படம் இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் மிகவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இதில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராமராக நடிக்கிறார். சீதா தேவியாக நடிகை கீர்த்தி சனோன் நடிக்கிறார்.

3டி திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராவணன் கேரக்டரில் ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடித்து வருகிறார். தன்னுடைய பிசியான ஷெட்யூலில் இந்த படத்திற்காக திகதி  ஒதுக்கி சைப் அலிகான் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சைப் அலிகான் இந்த திரைப்படம் பற்றி கூறும்பொழுது பத்து தலை ராவணனாக  நடிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றும், ராவணன் ஒரு அரக்கன் மற்றும் மாயை என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் படம் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சைப் அலிகான் ராமன் பற்றிய சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் மீடியாவில் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!