கிழிந்த பேண்டுடன் குலுங்க குலுங்க மெட்ரோவில் ஆட்டம் போட்ட நடிகை!
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் 100 நாட்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தின் வெற்றிக்குப்ப்பின் வெளியான சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது. தொடர் வெற்றியால் தமிழில் கவனிக்கப்படும் நடிகையானார் லட்சுமி மேனன்.
பார்ப்பதற்கு குஷ்பூவைப்போல இவரும் சற்று உடல் பூசினாற்போல இருந்ததால் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், அதன்பிறகு சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வியடைந்தது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘றெக்க’ (2016). அதன்பின் கடந்த ஐந்து வருடங்களாக இவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் மேற்படிப்பிற்காக சிலகாலம் சினிமாவைவிட்டு விலகியிருந்தார். இதையடுத்து மீண்டும் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தார்.
விக்ரம் பிரபுவுடன் இணைந்து இவர் நடித்திருந்த அந்த படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது. இதையடுத்து மீண்டும் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கிழிந்த பேண்ட் மற்றும் கருப்பு டீசர்டில், மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.