இன்றைய வேத வசனம் 13.11.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 13.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

எனக்கு நண்பர்கள் இல்லை என்று யாருமே கூற முடியாத அளவுக்கு இன்றைய சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் புதிது புதிதாக கிடைக்கிறார்கள்.

ஆனாலும் நண்பர்கள் வைத்துக் கொள்வது சரியா ? தவறா ? இதைப் பற்றி வேதம் என்னக் கூறுகிறது என்று ஆராய்ந்து அறிந்து செயல்பட விரும்பும் தேவ பிள்ளைகளுக் கான கட்டுரை இது.

உயிர் நண்பன் யார்?

சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்ட வேண்டும் (நீதிமொழிகள் 18:24 ).
ஏனெனில் இன்றைக்கு உடன் பிறந்த சகோதரர்களைவிட அதிக சொந்தமாய் சிநேகிக்கிற நண்பர்கள், தோழிகள் அநேகர் உண்டு.

எனது கல்லூரி நாட்களில், நட்பு வைத்துக் கொள்வது (Friendship) தேவனுக்கு பிரியமில்லாதது  என நான் நினைத்து ஒதுங்கி வாழ்ந்ததுண்டு. ஆனால் நல்ல நண்பர்கள் கிடைப்பது கூட தேவனது கிருபையே என அறிந்து கொண்டேன். 

நமது இயேசு கிறிஸ்துக்கூட தமது சீஷர்களிடம் தன்னை "சிநேகிதன்" என்று கூறிக் கொள்ளவே விரும்பினார். (யோவான் 15:15)

அவரைப் போல சிறந்த நண்பனை இந்த உலகில் வேறு எங்குமே காண முடியாது. ஏனெனில் நமக்காக தன் ஜீவனைக் கொடுத்த சிறந்த நண்பர் அவரே! (யோவான் 15:13). 

அனுதினமும் நம்மிடம் பேசத் துடிக்கும் அந்த உயிர் நண்பனைக் காக்க வைத்து விட்டு வேறு யாருடனும் நேரம் செலவிடுவது உண்மையான நட்புக்கு அழகல்ல.

எனவே நமது உயிர் நண்பன் இயேசுவைவிட வேறு யாரையும் அதிகமாக நேசித்து விடாதீர்கள். அது அவரது தியாகத்தை அவமதிப்பதாகும். 

வேறு நண்பர்களை வைத்துக் கொள்ளக்கூடாதா?

நீதிமொழிகள் 27 : 10 - ன் படி உங்கள் நண்பர்களை மட்டுமல்ல, தகப்பனுடைய நண்பர்களையும் கூட விட்டு விடாதீர்கள். ஏனெனில் ஆபத்தில் உதவுபவர்கள் அநேகமாக நண்பர்கள் தான். 

நமது நண்பர்களை வைத்தே நம்மை மற்றவர்கள் எடை போடுவார்கள். எனவே நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம்.

எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக் கொள்ள வேண்டும்?

தாவீது - யோனத்தானின் நட்பு பற்றி (#I_சாமுவேல் 18:1) ல் அழகாக கூறப்பட்டுள்ளது. தன் உயிரைப் போல தாவீதை சிநேகித்த யோனத்தான் தனது இராஜாங்கம் தன் நண்பன் தாவீதுக்கு கிடைக்கப் போகிறது என்கிற தேவ திட்டத்தை அறிந்து, சுயநலமின்றி விட்டுக் கொடுத்து அவனுக்காகப் பரிந்து பேசுகிறான் (1 சாமுவேல் 23:17). 

உண்மையான நட்பில் சுயநலமிருக்காது. எனவே தேவ திட்டத்தில் உங்களை நடத்துகிற சுயநலமற்ற நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் அப்படியே இருங்கள். 

யோபுடைய நண்பர்கள் கூட அவனுக்கு நேரிட்ட தீமையைக் கண்டு அவனை  கேலி செய்யவில்லை, மாறாக அவனுக்காக பரிதபித்து, ஆறுதல் கூற வந்தார்கள்" (யோபு 2:11). உங்கள் நண்பன் எப்படி? யோசியுங்கள்! 

கூடா நட்பு அவசியமா?

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு வேதத்தில் சிறந்த எடுத்துக்காட்டுகள் அம்னோன் ( 2 சாமுவேல் 13:3) மற்றும் யெரொபெயாம் (1 இராஜாக்கள் 12:8).

அம்னோன் மானத்தை, அறிவை, உயிரை இழந்தான். யெரொபெயாம் வாக்களிக்கப்பட்ட இராஜ்ஜியத்தை இழந்தான்.

எனவே வேதத்திற்கு புறம்பாக நடக்க உங்களை கட்டாயப்படுத்தும் எப்படிப்பட்ட நட்பானாலும் விட்டு விலகி ஓடுங்கள். உயிரையும், பரம இராஜ்ஜியத்தையும் இழந்து விடாதீர்கள்! 

உண்மையான நண்பன் (தோழி) நீங்கள் தவறும்போது சரிபடுத்துவான் (நீதிமொழிகள் 27:6), உங்கள் தவறை நியாயப்படுத்தி ஒத்து ஊதமாட்டான்.

எனவே நீங்கள் செய்கிற எல்லாவற்றிற்கும்  ஆமாம் சாமி போடுகிற நண்பனை அருகில் வைக்காதீர்கள்.
உண்மையான வழியை (சத்தியம்) காண்பித்து, உங்களை கண்டித்து உணர்த்துகிற நட்பை வைத்துக் கொள்ளுங்கள்.

சிறந்த நண்பன் தன் பேச்சிற்கு அல்ல, வசனத்திற்கு கீழ்ப்படிய கட்டாயப்படுத்துவான். “உங்கள் தவறை உங்களிடமே சுட்டிக் காட்டுபவன் உண்மையான நண்பன், அதை மற்றவரிடம் கூறித் திரிபவன் நல்ல நண்பனாக இருக்கமான்டான்.

மேற்கண்ட அளவுக்கோலை வைத்து உங்கள் நண்பன் (தோழி) எப்படிப்பட்டவர் என்பதை சிந்தித்து அறியுங்கள்.

சரியாக வழிகாட்டுகிற ஆவிக்குரிய நட்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள், கர்த்தர் உங்கள் நட்பை அங்கீகரித்து ஆசீர்வதிப்பாராக!

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!