அண்ணாத்த படம் நஷ்டம்…ரஜினி சம்பளத்தில் கை வைத்த கலாநிதி மாறன்…
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. அதோடு, 2020ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், படப்பிடிப்பு துவங்கி சில நாட்களிலேயே கொரோனா காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்பு துவங்க படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன்பின், படப்பிடிப்பு ஒருவழியாக துவங்கி நடந்து முடிந்து கடந்த 4ம் தேதி இப்படம் வெளியானது.
மொத்தத்தில் திட்டமிட்டதை விட ஒருவருடம் கழித்து அண்ணாத்த படம் வெளியானது.
ஏற்கனவே அதிக நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம். எனவே, ரஜினிக்கு குறைவான சம்பளமே பேசப்பட்டது. அதாவது அவர் வாங்கும் சம்பளமான ரூ.100 கோடியிலிருந்து ரூ.20 கோடி குறைத்து ரூ.80 கோடி பேசப்பட்டது. ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார்.
நவம்பர் 4 தேதி படம் வெளியாகி முதல் 4 நாட்கள் நல்ல வசூலை பெற்றாலும் 5ம் நாள் முதல் மழை துவங்கியதால் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. அதோடு, அதிக வசூலை குவிக்கும் சென்னையில் கனமழை என்பதால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அண்ணாத்த பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஜினிக்கு பேசிய சம்பளத்தில் பாதியை மட்டுமே கொடுப்பது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம். மேலும், படத்தில் வேலை செய்த சில முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 30 சதவீத சம்பளத்தில் கட் செய்யப் போகிறார்களாம். இதுபோக அடுத்த படமும் தங்களுக்கு நடித்து கொடுக்க வேண்டும் என ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்..
இது என்னடா ரஜினி படத்திற்கு வந்த சோதனை!.