புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய வழிகாட்டி வெளியானது

Reha
2 years ago
புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய வழிகாட்டி வெளியானது

நாளைய தினம் (16) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை கடைபிடிக் வேண்டிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், ஒன்று கூடல்கள் மற்றும் களியாட்டங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்  வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், திருமண நிகழ்வுகளின்போது, திருமண மண்டப கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியளவிலும், 100க்கு மேற்படாத வகையிலும் நபர்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், திருமண வைபவங்களில் மதுபான விருந்துபசாரங்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மரண வீடுகளில், ஒரு சந்தர்ப்பத்தில் ஆகக்கூடியது 20 பேருக்கு மாத்திரமே  பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.