60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பான அறிவிப்பு

Reha
4 years ago
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பான அறிவிப்பு

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுன்ன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபும் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4