மூன்றாவது முறையாக கமலுடன் இணைந்த த்ரிஷா…. எந்த படத்தில் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்க உள்ளார்.
இந்தியன் 2 படம் எப்போதோ உருவாகி இருக்க வேண்டிய படம். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து, படக்குழுவினர் இடையே நடந்த மனக்கசப்பு போன்ற பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது தான் அனைத்து பிரச்னைகளையும் முடிவடைந்து டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகுவதாக அறிவித்தார். திருமணம் முடிந்த பின்னர் சில காரணங்களால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் காஜல் இந்தியன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் படக்குழுவினர் தவித்து வந்தனர்.
தற்போது காஜல் கேரக்டரில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம். த்ரிஷா ஏற்கனவே மன்மதன் அம்பு, தூங்காவனம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது முன்றாவது முறையாக இணைய உள்ளார்.
இருப்பினும் சங்கர் படத்தில் த்ரிஷா நடிப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா பொன்னியின் செல்வன், இந்தியன் 2 என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் மீண்டும் அவர் மார்க்கெட் உயர தொடங்கி உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.