யாழில் குடும்பத்தினருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த நபர்!

Reha
4 years ago
யாழில் குடும்பத்தினருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த நபர்!

யாழ்ப்பாணம், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியை ஆதரவற்றவர்களை பராமரிக்கும் இல்லம் அல்லது பொது நிறுவனங்களிற்கு வழங்குமாறு தனது குடும்பத்தினரை வலியுறுத்தி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் முன்பாக அதன் உரிமையாளர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி சார்பில் பணம் கடனாக பெறப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டு, கலைக்கல்லூரியை பொது நிறுவனங்களிற்கு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு  வேந்தன் கலைக்கல்லூரியை விற்கவோ, வழங்கவோ மனைவி கையொப்பமிட மறுக்கிறார் என போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சற்று முன்னர் அங்கு சென்ற  யாழ் பிரதேச செயலாளர் , குறித்த நபரை சமரசம் செய்து, போராட்டத்தை முடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4