நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை கார்த்திகைத் தீபத் திருநாளன்று திறப்பு! (photo)

Reha
4 years ago
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை கார்த்திகைத் தீபத் திருநாளன்று திறப்பு! (photo)

கார்த்திகைத் தீபத் திருநாளான நாளைமறுதினம் காலை 10 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதையொட்டி நாவலர் கலாசார மண்டபத்தைத் திருத்தியமைக்கும் பணிகள் இன்று நடைபெற்றன. நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், அங்கு நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4