அரிய வகை தாமரை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு

#SriLanka
Prathees
2 years ago
அரிய வகை தாமரை இனம்  இலங்கையில் கண்டுபிடிப்பு

இலங்கைக்கு சொந்தமான தாமரை தாவரத்தின் அரிய மற்றும் உள்ளூர் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

களுத்துறை வளல்லாவிட்ட மேற்கு பிரதேச செயலக எல்லைக்குள் குலவிட்ட கிராம சேவகர் பிரிவில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாவரம்  Strobilanthes rhytisperma என  அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த பூ 1867 இல் மத்திய மாகாணத்திலும்இ 1971 இல் களுத்துறை மாவட்டத்தில் உள்ள ரன்வல வனப் பகுதியிலும் கடைசியாக காணப்பட்டதாக ஆராய்ச்சி குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை உயிருள்ள மாதிரிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர் பேஷல பசன் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்த இனம் நாட்டில் வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஆராய்ச்சி குறிப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாவர இனமாக இது அடையாளம் காணப்பட்டது.

தாவர இனங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆய்வாளர் பேஷல பசன் கருணாரத்னவால் 
வலல்லாவிட்ட பிரதேசத்தில் இந்த தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், தாவர இனங்கள் தொடர்பான நிபுணரான ஹிமேஷ் தில்ருவன் ஜயசிங்க, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் தாவர இனங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ரேணுகா நிலாந்தி ராஜபக்ஷ மற்றும் நுவான் சதுரங்க ஜயவர்தன உட்பட்ட ஆய்வுக் குழுவினரால் ஆய்வுகள் நடத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!