இன்றைய வேத வசனம் 17.11.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 17.11.2021

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் வசித்த முத்தையா என்பவர்  தன்னுடைய வயலுக்கு அருகாமையில் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி கீழே கிடந்ததை கண்டு  அதை எடுத்து பார்த்தார்.

இதுவரையும் அவர் இதை பார்த்திராததினால் தன்னுடைய முகம் தான் பிரதிபலிக்கிறது என்று தெரியாமல் யார் இவராக இருக்கக்கூடும் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் அவர் உள்ளத்தில் பிரதிபலித்தது.
இந்த விசித்திரமான பொருளை தன்னுடைய மனைவியினிடத்தில் காட்டலாமே என்று தன்னுடைய வேட்டியில் கட்டிப்போட்டுக்கொண்டார்.

வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றார். வேலை பார்த்த களைப்பில் திண்ணையில் சாய்ந்து தூங்கிவிட்டார். வீட்டம்மாவுக்கு வெத்தலை போடுகிறபழக்கம் உண்டு.

அன்று வெத்தலை மெல்லுவதற்காக பொட்டலத்தை எடுத்து பார்க்கும்பொழுது அங்கே சுண்ணாம்பு இல்லை. உடனே தனது வீட்டுக்காரரின் வேட்டியில் உள்ள வெத்தலை பையை திறந்து பார்த்ததும் அங்கே ஒரு அதிர்ச்சி.

இவரும் இதுவரையும் பார்த்திராத அந்த முகம்பார்க்கும் கண்ணாடி, அதில் தன்னுடைய முகம் தான் தெரிகிறது என்று தெரியாமல், அடியேயார் இந்த சிருக்கி! ஏன் இவளை தன்னுடைய வேட்டியில் இவர் கட்டி வைத்திருக்கிறார்.

ஏதோ தப்பான உறவு இந்த மனிதனுக்கு இருக்கிறது என்று சிந்திக்கும் வேளையில் கோபம் தலைக்கு ஏறியது.

அந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக, வெறியாக, கொலையாக மாறியது. அம்மிக்கல்லால் அவர் தலையை பதம்பார்த்தாள். முடிந்தது கதை.

காவலர் வந்த பிற்பாடுதான் இது கண்ணாடி. இது தன்னையே பிரதிபலிக்கும் சாதனம் என்று கண்டு உள்ளம் உடைந்தாள்.

மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி. (நீதிமொழிகள் 12:16)

நண்பர்களே! மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே (யாக்கோபு 1:20)
பலர் கோபம் என்பது எங்களுடைய ஒரு குணம் என்பர். மனிதனுக்குள்ள எல்லா குணங்களும் வளரும் தன்மையைபெற்றது.

அதைப்போல இந்த கோபமோ வளர்ந்து அதன் நிலைகள் - பகையாகவும், வெறுப்பாகவும், வெறியாகவும் வளர்ந்து கொலைவெறியாக உருவெடுக்கிறது.

ஆகவேதான் பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதிமொழிகள் -27:4)

உங்களுக்கும் கோபம் ஒரு குணமாக இருக்குமானால், அது வேண்டாம் அது நல்ல உறவுகளை மண்ணுக்குள் புதைத்துவிடும். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய வாழ்வில் வருவாரேயானால் தேவ அன்பை உள்ளத்தில் ஊற்றிவிடுவார்.

கோபத்தில் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த குடும்பங்களை இணையச்செய்வார். சமாதானமும் சந்தோஷமும் உங்கள் குடும்பங்களை ஆளும்.தேவன் தாமே உங்களை அவ்வண்ணமாக நடத்துவாராக. ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!