கஞ்சாவை வளர்க்குமாறு பாராளுமன்றில் வலியுறுத்திய எம்பி

#Parliament #Budget 2022
Prathees
2 years ago
கஞ்சாவை வளர்க்குமாறு பாராளுமன்றில் வலியுறுத்திய எம்பி

கஞ்சா பயிரிடுவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருமதி டயானா கமகே மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2025 ஆம் ஆண்டில், கஞ்சாவின் உலக சந்தை மதிப்பு  8.6 பில்லியன்டொலர்  முதல் 10.5 பில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மருந்துகளை முறையாக பயிரிட்டு  ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். பணத்தைப் பெற நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

சர்வதேச நாணய நிதியத்திற்குச்  க்கு செல்ல வேண்டியதில்லை, நீங்கள் யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. இந்தப் பயிரை வளர்த்து, அந்நியச் செலாவணியைப் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!