நண்பனைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

#Court Order
Prathees
4 years ago
நண்பனைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

தனது நண்பரை கொலை செய்த நபருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதன்படி கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2006ஆம் ஆண்டு தனது படுக்கையறையில் நண்பரொருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக மஹிந்த ரத்நாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஆனமடுவஇ மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

வத்துபிட்டிவலஇ யட்டியான பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்கும் விடுதியில் அப்போது 22 வயதுடைய சமிந்த பண்டார என்ற நபர்,2006 ம் ஆண்டு  நவம்பர் 30ம் திகதி அன்று கொலை செய்யப்பட்டமை நீதிமன்றத்தில் தெரியவந்தது.

பிரதிவாதியும் இறந்தவரும் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4