நுவரெலியா காட்டுக்குள் காணாமல்போன அதிகாரிகள் குழு!

#NuwaraEliya
Prathees
2 years ago
நுவரெலியா காட்டுக்குள் காணாமல்போன அதிகாரிகள் குழு!

நுவரெலியா - மஹ எலிய வனப்பகுதிக்கு சென்ற வனபாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் 15 பேர் கொண்ட குழுவொன்று காட்டில் காணாமல் போயுள்ளது.

எவ்வாறாயினும்இ சிக்கித் தவித்த தள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று (17) காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஹட்டன் வன பாதுகாப்பு அதிகாரி சுஜித் அஜந்த தெரிவித்தார்.

நுவரெலியா வன அலுவலகத்தைச் சேர்ந்த 15 அதிகாரிகள் மற்றும் ஹட்டன் வன அலுவலகத்தைச் சேர்ந்த 06 அதிகாரிகள் உட்பட 21 பேர், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுத் தளமொன்றை சுற்றிவளைப்பதற்காக நேற்று (16) காலை இரண்டு வழிகளில் காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

பொகவந்தலாவ லொயினோன் நோர்த்கோ தோட்டப் பகுதியிலிருந்து கடந்த 16ஆம் திகதி காலை ஹட்டன் வனப் பாதுகாப்பு  அலுவலக அதிகாரிகள் காப்புக்காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

ஏனைய அதிகாரிகள் பலாங்கொடை, பெலிஹுலோயா பஹந்துடாவ பிரதேசத்தில் இருந்து காப்புக்காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

அதன்படி கடந்த 16ஆம் திகதி பிற்பகல் குறித்த வனப்பகுதியில் பெய்த கடும் மழையினால் பஹந்துடாவ பிரதேசத்தில் இருந்து வனப்பகுதிக்குள் பிரவேசித்தவர்கள் தொலைபேசி சமிக்ஞைகளை இழந்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, அவர்கள் இரவை காட்டில் கழிக்க வேண்டியிருந்தது.

எவ்வாறாயினும், காணாமல் போன அதிகாரிகளை தேடுமாறு இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டதாக ஹட்டன் வன பாதுகாப்பு உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இன்று (17) காலை 9 மணியளவில் பொகவந்தலாவ லொயினோன் நோர்த்கோ பிரதேசத்தில் சிக்கித் தவித்த அதிகாரிகள் குழுவிற்கு வெளியே வர முடிந்தது.

எனினும், சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமான எவரையும் அவர்களால் கைது செய்ய முடியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!