அஜித்துடன் மோதும் சூர்யா…. யாருக்கு வெற்றி? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!

#TamilCinema #Actor
அஜித்துடன் மோதும் சூர்யா…. யாருக்கு வெற்றி? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!

அஜித் நடிப்பில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உருவாகியுள்ள படம் தான் வலிமை. இயக்குனர் வினோத்துடன் இரண்டாவது முறையாக அஜித் கூட்டணி அமைத்துள்ள வலிமை படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி நாயகியாகவும், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் பொங்கலுக்கு வலிமை படம் சோலோவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது போட்டியாக மற்றொரு படமும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியான நிலையில், தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் படம் வெளியானது. அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அஜித் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் சூர்யா நடிப்பில் படங்கள் வெளியாகி இருந்தாலும் ஓடிடியில் மட்டுமே வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தியேட்டரில் வெளியாகும் சூர்யாவின் முதல் படம் என்றால் அது எதற்கும் துணிந்தவன் படம் தான்.

எனவே இவ்விரண்டு படங்களுக்கும் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இரண்டு பேரில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!