புத்தளம் − கல்பிட்டி கடலில் ஆரம்பமான டொல்பின் வசந்த காலம்

Reha
2 years ago
புத்தளம் − கல்பிட்டி கடலில் ஆரம்பமான டொல்பின் வசந்த காலம்

புத்தளம் − கல்பிட்டி கடலில் டொல்பின் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளதாக டெல்பின் படகு ஒட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை ஒரு மாத காலம் தாமதமாகியே, டொல்பின் வசந்த காலம் ஆரம்பமானதுடன் நவம்பர் மாதம் முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை இவ்வாறு டெல்பின்களை கல்பிட்டி பகுதியில் கண்டுக்கொள்ள முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே, டொல்பின்களை காண முடியும் எனவும் சிறிய ரக படகொன்றில் படகு ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு மேலதிகமாக 6 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் அங்கிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பயணிப்பதற்கு முன்னரும், பயணித்ததற்கு பின்னரும் படகில் கிருமி ஒழிப்பு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, டொல்பின்களை பார்வையிடும் போது, டொல்பின்களின் செயற்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் டொல்பின்களை சுமார் 50 மீற்றர் தொலைவிலிருந்தும் பார்வையிடுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தின் கல்பிட்டி பிரதேசத்திற்கான சிரேஷ்ட வனப் பாதுகாப்பு அதிகாதி மஞ்சுள மொரதென்ன கோரிக்கை விடுத்துள்ளார்  .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!