நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் - பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர்

Reha
4 years ago
நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் - பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர்

தற்போது நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

முத்துராஜவெல களஞ்சியத்தில் தற்போது 40 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் ஏற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் 36 ஆயிரம் மெற்றிக் டன் பெற்றோல் கிடைக்கவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் 40 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் கொண்டுவரப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமென இலங்கை மொத்த பெற்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4