இலங்கையின் பழம்பெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய விருது

#India
Prathees
2 years ago
இலங்கையின் பழம்பெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய விருது

இலங்கையின் பழம்பெரும் நடனக் கலைஞர் கலாநிதி விஜிர சித்ரசேனவிற்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ´பத்ம ஶ்ரீ´ விருது வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் இன்று (17) அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவ்விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'பத்ம ஸ்ரீ விருது' ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் காலமான கலாநிதி விஜிர சித்ரசேன மற்றும் பேராசிரியர் இந்திரா தசநாயக்க ஆகியோர் இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபல்யப்படுத்தியதன் மூலம் 2020 ஆம் ஆண்டிற்கான கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8, 2021 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்களால் பேராசிரியர் இந்திரா தசநாயக்க சார்பில் அவரது மகள் வத்சலா தசநாயக்க பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!