மருந்துகளின் விலைப்பட்டியலை வெளியிட்ட மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு

Reha
2 years ago
 மருந்துகளின் விலைப்பட்டியலை வெளியிட்ட மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு

மருத்துகளின் விலைகள் 100%, 200 % இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், 60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எனவே, குறித்த மருந்துவகைகளை அதிக விலையில் விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை complaints@nmra.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும் டொலரின் பெறுமதிக்கமைய, ஆகஸ்ட் மாதம் மருந்துகளின் விலைகளை 9 சதவீத்தில் மாத்திரம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் முறையான விற்பனை விலையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, மருந்துகளின் விலைப்பட்டியலை, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!