அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி - தலைமறைவான தம்பதி கைது

#India #Crime
அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி - தலைமறைவான தம்பதி கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் அருண்குமார், இவரது மனைவி கிருஷ்ண கோகிலா. இந்த தம்பதி அரசு வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் 7 பேரிடம் 14 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சித்தார்த் என்பவர் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தப்பியோடி காரைக்குடியில் தலைமறைவாக இருந்த தம்பதியினரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

இதையடுத்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், சென்னையில் இவர்கள் மீது ஏற்கெனவே மோசடி வழக்கு உள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேரிடம் 38 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4