டெல்டா மாறுபாட்டின் மற்றுமொரு திரிபு இலங்கையில் கண்டுபிடிப்பு

#Covid Variant
Prathees
2 years ago
டெல்டா மாறுபாட்டின் மற்றுமொரு திரிபு இலங்கையில் கண்டுபிடிப்பு

டெல்டா மாறுபாட்டின் மற்றுமொரு திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் சந்திம ஜீவந்தர இன்று தெரிவித்தார்.

அதன்படி, புதிய திரிபுக்கு B.1.617.2.104 என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது நாட்டில் முன்னர் கண்டறியப்பட்ட B.1.617.2.28 என்ற திரிபின் வரிசைக்கு மேலதிகமாக உள்ளது.

எனவே, இலங்கையில் உள்ள டெல்டா மாறுபாடுகள் இப்போது இலங்கையில் தோன்றிய இரண்டு தனித்துவமான துணைப் பரம்பரைகளைக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

B.1.617.2.104 திரிபு  வடக்கு, வட-மத்திய மாகாணங்கள் மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் முக்கியமாகக் காணப்படுகின்றன, அதே சமயம் B.1.617.2.28 திரிபு மேற்கு மாகாணத்தில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!