பைசர் தீங்கு விளைவிக்கும்! மற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்யுமாறு பேராசிரியர் திஸ்ஸ வலியுறுத்து

#Covid Vaccine
Prathees
2 years ago
பைசர் தீங்கு விளைவிக்கும்! மற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்யுமாறு பேராசிரியர் திஸ்ஸ வலியுறுத்து

Pfizer தடுப்பூசி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் எனவும் Pfizer தடுப்பூசியை இறக்குமதி செய்வதைக் குறைத்து, மற்ற தடுப்பூசிகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு  பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Pfizer Covid-19 தடுப்பூசி  RNA தடுப்பூசி என்றும்  ஒரு மரபணு நேரடியாக மனித உடலில் செலுத்தப்பட்ட பிறகு அது எவ்வாறு செயல்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

முதன்முறையாக மனிதர்களுக்கு ஊசி போடும் தடுப்பூசிகளில் ஆர்என்ஏ பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் மருத்துவ அதிகாரி என்ற முறையில் தனக்கு பைசர் தடுப்பூசி குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

"எனக்கு அறிவியல் ரீதியாக பைசர் மீது சந்தேகம் உள்ளது. இது ஒரு புதிய தடுப்பூசி வகை. இது ஒரு RNA தடுப்பூசி.

கோவிட்-19 நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக ஆர்என்ஏவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் முதன்முறையாக மனிதர்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மரபணு நேரடியாக மனித உடலில் செலுத்தப்படும்போது அது எவ்வாறு செயல்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

இது தீங்கு விளைவிக்கும் பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய. சாத்தியம் உள்ளது.

எனவே ஏனைய மாற்று தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

சினோபார்ம் போன்ற முற்றிலும் செயலிழந்த வைரஸைப் பயன்படுத்தி சாதாரண முறையின் கீழ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதாக என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!