நெருப்பு விலையில் மரக்கறிகள்

#prices #Vegetable
Prathees
2 years ago
நெருப்பு விலையில் மரக்கறிகள்

சந்தையில் மரக்ககறிகளின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் விலை மேலும் உயரக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உரப் பற்றாக்குறை மற்றும் பாதகமான வானிலையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்று (20) பேலியகொட மானிங் சந்தையில் நிலவும் நிலவரங்கள் குறித்து மனிங் பொது தொழிற்சங்கத்தின் பிரதம அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவிக்கையில், 

இன்று மெனிங் மார்க்கெட்டுக்கு மரக்கறிகள் வந்தாலும், கடந்த சனிக்கிழமையை விட சனிக்கிழமை காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

மரக்ககறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.

இதற்கு முக்கியக் காரணம், எண்ணெய், உரத் தட்டுப்பாடு மற்றும் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

நுகர்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில், காய்கறிகள் மட்டுமின்றிஇ அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இது எதிர்காலத்தில் மேலும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளை பயிர்ச்செய்கைக்கு வழிநடத்தாவிட்டால் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!