அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம்: பந்துல

Prathees
2 years ago
அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம்: பந்துல

அந்நியச் செலாவணி இல்லாமல் நாட்டை ஒரு கணம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கமே காரணம் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ, தொடந்துவ, பின்கந்தவில் 431வது லங்கா சதொச கிளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வரலாறு காணாத பல நெருக்கடிகளை நாம் சந்தித்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து தென்னிலங்கை மக்களே முதலில் வெளியே வந்தனர்.

ஹிக்கடுவே சுமங்கல தேரர், வெலிவிட்டியே சோரத தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் அவர்களுள் அடங்குவர்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறைதான் மிகப்பெரிய நெருக்கடி. அந்நிய செலாவணி இல்லாமல் நாடு முன்னேற முடியாது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் இறக்குமதி செய்ய வேண்டும்.

ஏனென்றால், அந்தப் பொருட்கள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை. இது எரிவாயு மற்றும் எரிபொருள் இரண்டிற்கும் பொதுவானது. இதற்கு நாம் பணம் சம்பாதிக்க வேண்டும்.

இந்த அந்நிய செலாவணி நெருக்கடிக்கும் டொலர் பற்றாக்குறைக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப் பொறுப்பு.

ஏனெனில் அந்த அரசாங்கத்திடம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் இருக்கவில்லை.ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டது.

இதற்கு நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.கடந்த அரசாங்கத்தில் இரண்டு நிதி அமைச்சர்கள் இருந்தனர்.

அந்நியச் செலாவணியை எவ்வாறு நிர்வகிப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. நிதி நெருக்கடியை தடுக்க அந்த அமைச்சர்கள் திட்டம் தீட்டவில்லை என அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!