கனடாவில் தமிழ்மக்கள் கடும் எதிர்ப்பு:பொலிசாரின் பாதுகாப்புடன் வெளியேறிய சுமந்திரன்,சாணக்கியன்!

Reha
2 years ago
கனடாவில் தமிழ்மக்கள் கடும் எதிர்ப்பு:பொலிசாரின் பாதுகாப்புடன் வெளியேறிய சுமந்திரன்,சாணக்கியன்!

கனடாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. கனடிய பொலிசாரின் பாதுகாப்பில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கனடாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கும் குழு, நிதி சேகரித்து, எம்.ஏ.சுமந்திரன் அணிக்கு மட்டுமே அனுப்பி வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில், இப்படி முறையற்ற செயலில் ஈடுபடுவது குறித்த பலமான அதிருப்தி அங்குள்ள தமிழ் சமூகத்திற்குள் உள்ளது.

அதுதவிர, அந்த அமைப்பிற்குள் அங்குள்ள ஓய்வுபெற்ற முதியவர்கள் சிலர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள். புதியவர்களிற்கு, தமிழ் அரசு கட்சியின் முன்னைய தீவிர செயற்பாட்டாளர்களிற்கு இடமளிப்பதில்லையென்ற குற்றச்சாட்டும் உள்ளது. (எனினும், அந்த முதியவர்கள் அடிக்கடி தமிழ் அரசு கட்சியின் வயதான தலைமை ஒதுங்கி, சுமந்திரன் போன்ற இளையவர்கள் பொறுப்பேற்க வேண்டுமென கட்சிக்கு கடிதம் அனுப்பும் சுவாரஸ்யமும் நடக்கிறது)

இந்த நிலையில், கனடாவிற்கு தனிப்பட்ட பயணமாக சுமந்திரனையும், அவரது தரப்பை சேர்ந்த சாணக்கியனையும் அந்த குழுவினர் அழைத்திருந்தனர். ஸ்காபரோ நகரில் 20ஆம் திகதி அந்த கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்திற்கு வெளியில் ஒரு பகுதியினர் போராடட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மண்டபத்தில் பங்குகொண்ட எவரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கேள்விகேட்க அனுமதிக்கப்படவில்லை. எங்குத்தப்பான கேள்வி கேட்டால் விவகாரமாகி விடும் என ஏற்பாட்டாளர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர்.

எனினும், சுமந்திரன் சொல்வதை கேட்க மட்டும் இங்கு வரவில்லை, எம்மிடமும் கேள்விகள் உள்ளன என மண்டபத்தில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமந்திரன் மட்டுமே உரையாற்றுவதெனில் இங்கு வர வேண்டியதில்லை, அவர் இலங்கை பாராளுமன்றத்தில் பேசிக்கொள்ளட்டும் என்றும் குறிப்பிட்டனர்.

இறுதியில் கனடிய பொலிசார் அழைக்கப்பட்டனர். அவர்கள் வந்தும் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில், கூட்டம் இடைநிறுத்தப்பட்டு பொலிசாரின் பாதுகாப்புடன் சுமந்திரன், சாணக்கியன் மண்டபத்திலிருந்து வெளியேறி சென்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!