நாளை  திறக்கப்படும் பாடசாலைகள் தொடர்பாக வெளியான தகவல்கள்

#Student
Prathees
2 years ago
நாளை  திறக்கப்படும் பாடசாலைகள் தொடர்பாக வெளியான தகவல்கள்

கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தரப் பாடசாலைகளும் நாளை (22) முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.

கல்வி அமைச்சின் தீர்மானத்துடன் இன்னும் ஆரம்பிக்கப்படாத தரம் 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை பல கட்டங்களாக மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

 முதற்கட்டமாகஇ 200க்கும் குறைவான குழந்தைகள் உள்ள ஆரம்ப பாடசாலைகள் கடந்த மாதம் 21ம் திகதி திறக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் கடந்த மாதம் 25ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக   திறந்து வைக்கப்பட்டன

சகல பாடசாலைகளிலும் சாதாரண தரம் மற்றும் உயர்தர தரங்களின் மூன்றாம் கட்டத்தை இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்னும் ஆரம்பிக்கப்படாத 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான கற்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளை துப்புரவு செய்யும் பணி இன்று பெற்றோர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!