இன்றைய வேத வசனம் 22.11.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அன்று எத்தியோப்பியா மந்திரி, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்த பிலிப்பு, நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்.
அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான். (அப்போஸ்தலர் 8:31)
வேதாகமத்தின் மகத்துவங்களை இன்று உங்களுக்கு விளக்கிச் சொல்ல, அப்போஸ்தலர் பிலிப்பு உங்களோடு இல்லை. ஆனால் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தக்கூடிய ஆவியானவர் உங்களோடு கூட இருக்கிறார்.
மறை பொருட்களின் ரகசியங்களை வெளிப்படுத்தும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து உங்களோடு கூட இருக்கிறார்.
அன்று எத்தியோப்பியா மந்திரி, தன் அறியாமையை ஒப்புக் கொண்டு, தன்னைத் தாழ்த்தி, தேவ ஊழியனாகிய பிலிப்பு தனக்கு விவரித்துக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டதைப் போல, நீங்களும் கர்த்தருடைய ஆவியானவருக்கு உங்களைத் தாழ்த்தி ஒப்புக் கொடுப்பீர்களா?
எம்மாவூருக்குப் போன சீஷர்களுக்கு, வேத வாக்கியங்களை விவரித்துக் காண்பித்த இயேசு (லூக்கா 24:27). பயத்தோடும், நடுக்கத்தோடும் அறையை அடைந்துக் கொண்டிருந்த சீஷர்களுக்கு, வேதவாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி அவர்கள் மனதைத் திறந்த இயேசு (லூக்கா 24:25). உங்கள் உள்ளங்களையும் பிரகாசிக்கச் செய்வாராக.
சங்கீதம் 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
ஆமென்.