இன்றைய வேத வசனம் 24.11.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 24.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

முதல் தீர்க்கதரிசி யார் தெரியுமா? ஏனோக்குதான். கர்த்தருடைய வருகையைக் குறித்து ஏனோக்கு,  "ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்" (யூதா 1:15)

ஏனோக்கு என்னும் பெயருடைய இன்னொரு மனிதனும் வாழ்ந்ததாக ஆதியாகமத்தில் அறிந்துகொள்ளலாம். அவன் காயின் வம்சத்தவன். ஒரு பட்டணத்தை கட்டினபடியால், பிரசித்திப் பெற்றவனாக  இருந்தான்.

பட்டணத்தைக் கட்டினவன் போன இடம் யாருக்கும் தெரியாது. அவன் கட்டின பட்டணத்தோடு அவனும் போய்விட்டான்.

ஆனால், தீர்க்கதரிசன வரமுடைய மற்ற ஏனோக்கோ, தேவனோடு சஞ்சரித்து, தேவ வார்த்தைகளை மக்கள் உள்ளத்தில் விதைத்து, தேவ புத்தகத்தில் நீங்காத ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் பெயர் இன்றைக்கும் உலகம் முழுவதற்கும் சுகந்த வாசனையாயிருக்கிறது.

நீங்கள் பட்டணத்தைக் கட்டுகிறவர்களாயிருக்கிறீர்களா? அல்லது தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாயிருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையின் குறிக்கோள், தங்களுக்கென ஒரு அழகிய வீடு கட்ட வேண்டும் என்பதே! அது நல்லதுதான், ஆனால் அதைவிட முக்கியம், பரலோகத்தில் உங்களுக்கு வாசஸ்தலம் கட்டப்பட வேண்டும் என்பதே!

மரணத்தைக் காணாதபடிக்கு பரலோகத்திற்குப் போனவர்களில் முதலானவர் ஏனோக்கு! கர்த்தருடைய வருகைக்கு நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்று ஏனோக்கின் வாழ்க்கையும், சாட்சியும் உங்களுக்குப் போதிக்கிறது!

எபிரெயர் 11:5
அவன் (ஏனோக்கு) தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!