இன்றைய வேத வசனம் 25.11.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 25.11.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.  கொலோசெயர் 4:2

பண்டைய ரோம நாட்டில் செனேகா (கி.மு. 4-கி.பி. 65) என்னும் புகழ்பெற்ற தத்துவமேதை, விபச்சாரம் செய்தார் என்று பேரரசி மெசலினாவினால் குற்றஞ்சாட்டப்பட்டார். செனேகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பேரரசர் கிளாடியஸ், அவரை குற்றமற்றவராய் பார்த்ததினால், மரண தண்டனைக்கு பதிலாக, அவர் கோர்ஸிகா என்னும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த சூழ்நிலை செனேகாவின் நன்றியுணர்ச்சிக்கு புதுவடிவம் கொடுத்தது. அவர் சொல்லும்போது, “படுகொலைகள், கொடுங்கோலாட்சிகள், திருடர்கள், விபச்சாரக்காரர்கள், கொள்ளையர்கள், புனிதர்கள், துரோகிகள் ஆகியோர் எல்லா காலத்திலும் இருப்பர். ஆனால் அவை எல்லாவற்றையும் விட கொடுமையான குற்றம் நண்றியுணர்வில்லாமல் இருப்பதே” என்கிறார்.    

செனேகாவின் காலகட்டத்தில் வாழ்ந்த பவுல் அப்போஸ்தலர் இதை ஏற்றுக்கொண்டார். ரோமர் 1:21ல் நன்றியுணர்வில்லாதிருப்பதே மனுஷீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என்று பவுல் எழுதுகிறார். கொலோசெ திருச்சபைக்கு எழுதும்போது, நன்றியுணர்ச்சிக்கு மூன்று தரம் சவால் விடுகிறார். “ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோசெயர் 2:7) என்றும், தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆளும்போது, நன்றியறிதலுள்ளவர்களுமாயிருக்கவும் (3:15) அறிவுறுத்துகிறார். மேலும் நன்றியுணர்வே ஜெபத்திற்கும் மையமாய் அமைகிறது (4:2) என்கிறார். 

தேவனின் மாபெரும் தயவே வாழ்க்கையின் மிகச்சிறந்த யதார்த்தங்களை நினைவூட்டுகிறது. அவர் நம்முடைய அன்பிற்கும் துதிக்கும் மட்டுமின்றி, நம்முடைய நன்றியுள்ள இருதயத்திற்கும் பாத்திரர். வாழ்க்கையின் நன்மையான எந்த ஈவும் அவரிடத்திலிருந்தே வருகிறது (யாக்கோபு 1:17). 

கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து ஈவுகளுக்கும் நாம் நம்முடைய நன்றியுணர்வை சுவாசம்போல் இயல்பாகவே வெளிப்படுத்தவேண்டும். தேவனுடைய கிருபையுள்ள ஈவுகளுக்கு நம் நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!