இன்றைய வேத வசனம் 26.11.2021

#Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 26.11.2021

 

உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. (ஆமோஸ் 4:12). ஆயத்தமில்லாமல், திடீரென்று தேவனைச் சந்தித்தால், என்ன நேரிடும்?

1. யோவான் :-
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; (வெளிப்படுத்தல் 1:17)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் அன்பாயிருந்த சீசனாகிய ஆகிய யோவான், இயேசுவை மனுஷீகமாகவே இயேசுவை அதிகமாக அறிந்தருந்தபடியால்,
திடீரென்று கிறிஸ்துவின் கண்களை அக்னி ஜுவாலையாக பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தத, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரச்சல் போலவும் இருந்ததைக் கண்டு, மிகவும் பயந்து விட்டார்.

2. பவுல்:-
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். (அப்போஸ்தலர் 9:3,4)

3. ஏசாயா:-
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5) தேவ சந்திப்பு, ஏசாயாவில் பாவ உணர்வை ஊட்டி விட்டது.

4. மோசே:-
மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். (யாத்திராகமம் 3:6). உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; (ஏசாயா 59:2).

5. யோபு:-
என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். (யோபு 42:5,6).

வெளிப்படுத்தல் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், .

ஆமென்...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!