உரிய காலத்துக்குள் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து முடிக்க நடவடிக்கை!

Prabha Praneetha
2 years ago
உரிய காலத்துக்குள்  வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து முடிக்க நடவடிக்கை!

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்துக்குள் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்துக் கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து, அவற்றை பிரதான வீதிக் கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கையின் வீதிக் கட்டமைப்பின் புதிய தகவல்கள்” என்ற தலைப்பில், நேற்று முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த ஊடகச் சந்திப்பு, வீடியோ தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்டதோடு, இதில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சின் செயலாளர், பொதுமக்களின் பாரிய எதிர்பார்ப்புகளுக்குப் பாத்திரமாகியுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையான 41 கிலோமீற்றர் நீளமுடைய பகுதி, வெகு விரைவில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளது .

கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பாரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இதன் நிர்மாணப் பணிகள், பாரிய வெற்றியாகவே கருதப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!