நிஜ துப்பாக்கியுடன் செல்பி: எதிர்பாராத வகையில் வெடித்ததால் சிறுவன் உயிரிழப்பு

Keerthi
4 years ago
நிஜ துப்பாக்கியுடன் செல்பி: எதிர்பாராத வகையில் வெடித்ததால் சிறுவன் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள லிசாரி கேட் பகுதியை சேர்ந்த சிறுவன் உவைஷ் அகமத் (14). சிறுவன் நிஜ துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து சுடும் வகையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தான்.

அப்போது, திடீரென துப்பாக்கி டிரிக்கரை அழுத்தியதில் புல்லட் பாய்ந்து சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கூறியதாவது:-

உவைஷ் செல்பி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். உவைஷின் மூத்த சகோதரர் சுஹையில் திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவன். மேலும், நிறைய வழக்குகளும் சுஹையில் மீது உள்ளன.

அதனால், சம்பந்தப்பட்ட துப்பாக்கி சுஹையிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கி குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்." என்று அவர் கூறினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4