இன்றைய வேத வசனம் 03.12.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
எனக்கு அன்பானவர்களே, அந்நிய பாஷை பேசி ஜெபிக்கிறேன்; உபவாசம் பண்ணுகிறேன்! ஆனால் என் காரியம் எதுவும் நடக்க மாட்டேன் என்கிறதே என்று புலம்பிக் கொண்டு இருக்கிறீர்களா? ஒன்றை அறிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் கர்த்தருடைய பார்வைக்குப் நலமானதை செய்தால்தான், உங்கள் காரியங்களை எல்லாம் கர்த்தரால் வாய்க்கப் பண்ண முடியும்.
ஒருவேளை, நான் செய்கிறது எல்லாம் சரிதானே! அதில் என்ன தவறு இருக்கிறது என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அந்தக் காரியம், கர்த்தருடைய பார்வையில் சரியானதா? என்று யோசித்து பாருங்கள்.
எல்லோரும் செய்கிறார்கள்! நாமும் செய்தால் என்ன என்று நினைக்கிறீர்களா? நீங்கள் மற்றவர்களைப் போல் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்கள்! அதாவது தேவபிள்ளைகளாகிய நாம், இந்த உலகத்தை விட்டு கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்!
நாம் மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்! இப்படித்தான் வாழவேண்டும்! என்று பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தர் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நாம் இந்த உலகத்தில் மற்றவர்களைப் போல் வாழ முடியாது. காரணம், நம்முடைய தேவன் வித்தியாசமானவர்! அவர் பரிசுத்தமுள்ளவர்! மகா நீதியுள்ளவர்! நியாயம் செய்கிறவர்! அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
ஆகவே, அவருடைய பார்வைக்கு நலமானதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
ஜெபிக்கும் போது மட்டும்தான் கர்த்தர் நம்மைப் பார்க்கிறார்! என்று நினைக்கிறீர்களா? அப்படியல்ல! 24 மணி நேரமும் அவருடைய கண்கள் நம்மேல் நோக்கமாக இருக்கிறது என்பதை, உங்கள் நினைவில் பதித்துக் கொள்ளுங்கள்.
இன்றைக்கு, இயேசுவே, இதுவரை நான் எப்படி வாழ்ந்திருந்தாலும், இந்தநாளிலிருந்து இருந்தே நீர் என்ன விரும்புகிறீறோ, அதை தான் நான் செய்வேன். நீ விரும்புகிறபடி தான் நான் வாழ்வேன். என்று ஒரு தீர்மானம் பண்ணுங்கள்.
அதன்படி வாழுங்கள். கர்த்தர் நிச்சயம் உங்கள் தடைகளை மாற்றி உங்களை ஆசீர்வதிப்பார்.
#சங்கீதம் 143:10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
ஆமென்.