இன்றைய வேத வசனம் 04.12.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
போதகர் அஸ்டின் தன் சபை விசுவாசிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை அடிக்கடி பகிர்ந்து கொள்வதுண்டு.
ஒரு நாள் அந்த விசுவாசி வியாதிப்பட்டு மிகவும் பெலவீனமாய்ப் போனார். ஒரு நாள் அவர் தனிமையாய் படுத்திருந்தபோது, ஒருவன் அவரை நோக்கி வருவதைக் கண்டார். வந்தவன் வேறு யாருமல்ல சாத்தான் தான்!
அவர் உள்ளம் இயேசுவுக்காக ஏங்கியது. மறு வினாடியே இயேசு கிறிஸ்து அவருக்கும் சாத்தானுக்கு மத்தியில், சாத்தானை பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டார்.
இயேசு மெதுவாய் அந்த விசுவாசியின் அருகில் வந்தார், அவ்வளவுதான் விசுவாசியின் உடல் முழுவதும் தெய்வீக வல்லமையின் அதிகாரம் நிறைய ஆரம்பித்தது. "சாத்தானே, இயேசுவின் நாமத்தினால் உன்னை அதட்டுகிறேன்" என்று விசுவாசி சொன்னபோது சத்துரு ஓடி மறைந்தான்.
தேவஜனமே நீங்கள் தேவனோடு இணைந்திருக்கும்போது, கர்த்தர் உங்கள் கரங்களைக் கொண்டு பெரிய அதிசயங்களைச் செய்வார். பயப்படாதீர்கள்!
அன்றைக்கு, அவரின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்த சீஷர்களோடு இருந்து அற்புதங்களாளும் அடையாளங்களாளும் தன் வசனத்தை உறுதிப்படுத்தின தேவன், அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செவிக்கொடுக்கிற உங்களை கொண்டும் பெரிய காரியங்களைச் செய்வார். அல்லேலூயா...
மத்தேயு 28:20
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.