வாக்கெடுப்பை நிராகரித்த சபாநாயகர்: கூட்டமைப்பு, முன்னணி வெளிநடப்பு!

Mayoorikka
2 years ago
வாக்கெடுப்பை நிராகரித்த சபாநாயகர்: கூட்டமைப்பு, முன்னணி வெளிநடப்பு!

பாதுகாப்பு அமைச்சு,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகள் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்கெடுப்பு கோரி யும் அதனை சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சியினர் நிராகரித்ததால் ஆளும் தரப்புக் கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து தாம் வெளிநடப்பு செய்வதாகக் கூறி இரு கட்சி எம்.பிக்களும் சபையிலிருந்து வெளியேறினர்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக் கிழமை, பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாது காப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கள் மீதான விவாதம் இடம்பெற்றவேளையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தனர்.

இனப்படுகொலை விவகாரங்கள், வடக்கு-கிழக்கின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விடயங்களை சபையில் முன்வைத்தவேளை அதற்கு ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் விமர்சனத்தையும் முன்வைத்த
னர்.

இந்நிலையில் பிற்பகல் வேளையில் அமைச்சின் சகல விவாதங்களும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருந்தவேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை விடுத்தார்.

எனினும் இதற்கு ஆளும்கட்சியும், சபாநாயகரும் இணக்கம் தெரிவிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சின் மீதான வாக்கெடுப்பை கேட்க 24 மணிநேரத்துக்கு முன்னர் அதனைசபைக்கு அறிவிக்கவேண்டும். 

ஆனால் நீங்கள் அறிவிக்கவில்லை. எனவே இதனை கருத்தில் கொள்ள முடியாது. ஆனால்
உங்களின் எதிர்ப்பை பதிவு செய்துகொள்கின்றோம் என சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும் இதற்கு இணக்கம் தெரிவிக்காத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. , தான் இது குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சி பிரதம கொரடாவுக்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் அவர்கள்
அறிவிக்காதது எனது தவறு அல்ல என்றும் சுட்டிக்காட்டியதுடன், தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பறிக்கும் செயலாக இது அமைந்துள்ளது-என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்னை எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்எவ்வாறான இணக்கத்துக்கு வந்தாலும் கூட, பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தனது சிறப்புரிமையை பயன்படுத்தி வாக்கெடுப்பை கேட்கும்வேளையில் அதனை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க முடியாது. வாக்கெடுப்பு கேட்கும் வேளையில் அதற்கு அனுமதிக்கவேண்டும். அதனை நிராகரிப்பது தவறானது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்னை எழுப்பிய சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்திலும் இவர்கள் உள்ளனர். இதன்போது நாம் வாக்கெடுப்பை கேட்பதில்லை என நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இணங்கியுள்ளோம். 

ஆகவே அதனை இப்போது மீறமுடியாது என்றார். அதே நிலைப்பாட்டில் இருந்த சபா
நாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் தாம் வாக்கெடுப்பை வழங்க முடியாது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்ததீர்மானமே நடைமுறைப்படுத்தப்படும், எனவே இதுவே எனது இறுதி முடிவும்
என கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை நிராகரித்தார்.

இதன்போது விசனமடைந்த இருகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்கான சிறப்புரிமை இவ்வாறு ஆளுந்தரப்பின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக நிராகரிக்கப்படும் காரணத்
தினால் தாம் சபையை விட்டு வெளிநடப்பு செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் சபைக்கு அறிவித்தார்.

அதற்கமைய சபையில் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கஜேந்திரகுமார் எம்.பி, கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் சபையை விட்டுவெளியேறிச் சென்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!