11 மாணவர் கடத்தல் விவகாரத்தில் கரன்னாகொட மீது நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
11 மாணவர் கடத்தல் விவகாரத்தில் கரன்னாகொட மீது நடவடிக்கை!

தமது அரசாங்கம் அமைக்கப்பட்டதும் 11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி
கரன்னாகொடவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் இராணுவத் தளபதியான பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாது காப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகை யில், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எனக்கு பாதுகாப்பு அமைச்சை தருவதாகவும், அதன் மூலமாக இந்த செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்க எனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குவதாகவும் எமது தலைவர் எனக்கு வாக்குறுதியளித்துள்ளார். ஆகவே எமது அரசாங்கம் கண்டிப்பாக ஆட்சியமைக்கும், குற்றவாளிகள் எந்தப்பக்கம் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்.

இதேவேளை முன்னாள் கடற்படை தளபதியான கரன்னாகொட 11 மாணவர்களை கைது செய்து, கப்பம் கேட்டுகொலை செய்துள்ளார். அதில் சிங்கள, முஸ்லிம் மாணவர்களும் இருந்துள்ளனர்.

அவர்கள் பாடசாலைகளுக்கு செல்பவர்கள். இவர்களை கடலில் போட்டுள்ளதாக சாட்சிகளில் உறுதியாகியுள்ளது. இவ்வாறானவர்களை பாதுகாக்க வேண்டாம். எமது அரசாங்கம் வந்த பின்னர் நிச்சய
மாக இந்த பிரச்சனையை மேலே எடுப்போம். கரன்னாகொடவுக்கு எதிராக இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!