வவுனியாவில் இன்று மதியம் 3 வாகனங்கள் மோதி பெரும் விபத்து. கார் வர்த்தக நிலையத்தினுள்...

#SriLanka #Vavuniya #Accident
வவுனியாவில் இன்று மதியம் 3 வாகனங்கள் மோதி பெரும் விபத்து. கார் வர்த்தக நிலையத்தினுள்...

வவுனியாவில் இன்று மதியம் மூன்று வாகனங்கள் மோதி, கார் ஒன்று வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்ததால் அதற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (04.12) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்கள்ளானது.

விபத்துக்குள்ளான கார் அப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், வர்த்த நிலையத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக கார் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமைடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, விபத்திற்குள்ளான வாகனங்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4