மின் விநியோகத் தடை மேலும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் தொடரும்.

#SriLanka #Electricity Bill
மின் விநியோகத் தடை மேலும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் தொடரும்.

நுரைச்சோலையில் மின் உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத்தடை 4 நாட்களுக்கு தொடரும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையில் நாட்டின் சில பாகங்களில், ஒரு மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் நேற்று(03) இடம்பெற்ற மின்சாரத் தடையுடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின், இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாடு முழுக்க ஏற்பட்ட மின் தடை சம்பந்தமாக மின்சார சபை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4