எரிவாயு வெடிப்பிற்கான காரணத்தை வெளிப்படுத்திய சஜித் 

#Sajith Premadasa
Prathees
4 years ago
எரிவாயு வெடிப்பிற்கான காரணத்தை வெளிப்படுத்திய சஜித் 

எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எரிவாயு வெடிப்பு தொடர்பான உண்மையை மறைத்து அனைத்துமே நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எத்தில் மக்கப்டைன் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக விநியோகம் நிறுத்தப்படுவதாக நிறுவனங்கள் தெரிவித்தாலும் மக்களை ஏமாற்றுவதே உண்மையான கதை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு பாரிய ஆபத்தில் உள்ளதாகவும், நாடு முழுவதும் எரிவாயு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த கொடூர குற்றத்திற்கு அரசாங்கமும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களும்இ சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது ஒரு குற்றச் செயல் என்றும், திட்டமிட்ட குற்றச் செயல் என்றும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்தக் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4