மீண்டும் மீண்டும் மகிந்தாவை சீண்டும் மேவின் சில்வா. யார் இவரை தூண்டி விடுவது?

Reha
2 years ago
மீண்டும் மீண்டும் மகிந்தாவை சீண்டும் மேவின் சில்வா. யார் இவரை தூண்டி விடுவது?

10 ஆண்டுகளுக்கு முன்னர் நகமும் தசையுமாக மகிந்த அரசோடும், அவர்கள் குடும்பத்தோடும், உறவாக இருந்த மேவின் சில்வா, மகிந்தாவின் வலது கையெனவும், மேவின் என்ன தவறு செய்தாலும் அவரை மகிந்த கண்டுகொள்வதில்லை எனவும் ஒற்றுமையாக இருந்த காலத்தை ஏதோ ஒரு சற்ச்சைப் பேச்சால் மேவின் மகிந்தாவிடம் எம் ஜீ ஆர் பாணியில் அடி வாங்கிய‌தன் பின்னர் சற்று தளர்வு ஏற்பட்டது. 

அதன் பின்னர் மகிந்த அரசு தேர்தலில் தோல்வியைத் தழுவி, மைத்திரி ஆட்சியை பிடிக்க, அப்போ மகிந்தவை தாறும்மாறாக போட்டு விமர்சித்தார் மேவின். அப்பொழுது தொடக்கம் அவரது விமர்சனம் இப்பொழுதுவரை மகிந்த அரசை போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்பொழுது புதிதாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ராஜபக்ஷ அரசாங்கத்தின் கழுத்தினை நெருக்கிப் பிடித்துள்ளதாக  மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் ஜி எஸ் பி பிளஸ் தொடர்பான விடயம் இருக்கின்றது. அதேபோல மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் இருக்கின்றது.  இவை ராஜபக்ஷாக்களின் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளதாகவும், ராஜபக்ஷாக்கள் சர்வதேச நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

சீனாவிற்கு பின்னால் சென்று அவர்களுக்கு பந்தம் பிடித்த காரணத்தினால் தான் உலக நாடுகள் இலங்கை மீது எதிர்ப்புக் கொண்டன. இந்தியாவிற்கு பசில் ராஜபக்ஷ சென்ற போதிலும் பிரதமர் மோடி அவரைச் சந்திக்கவில்லை.

 ஏமாற்றமடைந்து நாடு திரும்பிவிட்டார். இந்தியா எமது நாட்டை கௌரப்படுத்தும் நாடு. இவர்களினால் இந்தியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரமுடியாது. ஜெனீவா மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ் பி பிளஸ் என்பனவற்றிற்க்கு இந்தியாவின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பசிலின் விஜயம் அமைந்திருந்தது என்பது அனைவ‌ருக்கும் தெரியும்.

தற்போதைய அரசதலைவர், அமைச்சர்கள், எல்லோருக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. இதனால் மக்களுக்கும் பைத்தியம் பிடித்துள்ளது. ராஜபக்ஷாக்கள் கொரோனா, கப்பல், உரம் என எல்லா இடங்களிலும் கொள்ளையடித்துள்ளார்கள்.

ஊழல், இலஞ்சம், என ராஜபக்ஷாக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்கள். ஆகவே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேவின்சில்வாவின் இவ்வறிக்கையால் மகிந்த குடும்பமே அவரில் மிகுந்த கோபத்தோடு இருப்பதாகவும், இவரிற்கு ஒரு பின்புலம் இருந்து இயக்குகிறது எனவும். அது யார் என்பதும் தாம் அறிந்திருப்பதாக மகிந்த வட்டார செய்திகள் தெரிவிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!