இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை எதற்காக நியூசிலாந்து அங்கீகரித்தது தெரியுமா?

Prasu
4 years ago
இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை   எதற்காக  நியூசிலாந்து  அங்கீகரித்தது தெரியுமா?

நியூசிலாந்தில் இயங்கிவரும் தமிழ் மொழிக்குழு, அந்நாட்டு கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த விடயம் உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து நாட்டவர்களுக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்த விடயம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விடயம்.

இதன்படி, மவுண்ட் ரோஸ்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மைக்கல் உட் முன்னிலையில், அண்மையில் விளக்கக் காட்சி ஒன்றை தமிழ் மொழிக்குழு காட்சிப்படுத்தியது.

போக்குவரத்து, அலுவலகத் தொடர்பு மற்றும் மனிதநல பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் மைக்கல் உட், நியூசிலாந்து நாட்டில் இயங்கிவரும் தமிழ் சார்ந்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைவத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியை நியூசிலாந்து பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்த விளக்கக் காட்சி ஜுன் 11, 2021 அன்று அமைமச்சர் உடனான சந்திப்பின் போது அவர்களுக்கு நன்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்விளக்கக்காட்சி அமைச்சர் மற்றும் நியூசிலாந்து தமிழ் மொழி குழுவிற்கு நிறைவைத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வமைப்பு அமைச்சர் அவர்களை இக்குழுவின் கௌரவ ஆலோசகராகப் பணியாற்ற கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர் ஒப்புதல் அளித்ததற்கு தமிழ் மொழிக்குழு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த அங்கீகாரம் தமிழர்கள் நியூசிலாந்து நாட்டின் சட்டதிட்டத்தை நன்கு பின்பற்றுவதும் ஒரு காரணமாகவே கருதப்படுகிறது. 

அத்தோடு சுவிஸ், கனடாவிலும் தமிழ் மொழி இரண்டாவது மொழியாக கற்க அங்கீகாரம் கிடைக்கும் எனவும் எதிர்பாற்க்கப்படுகிறது.

இருந்தும் சுவிசில் சட்டபூர்வமாக பதியப்பட்ட தமிழ் பாடசாலைகலில் எடுக்கும் புள்ளிகளை சுவிஸ் பாடசாலைகளின் புள்ளி எண்ணிக்கைக்குள் இணைக்கப்படுவதும் குறிப்பிடப்படுகிறது. 

ஆம்... வருங்காலங்களில் உலக அரங்கில் தமிழ் மொழியையும் தமிழ் மக்கழையும் இணத்து தமிழுக்கு மேலும் உலக மொழிப்ப் பட்டியலில் இணக்கப்படபோவதும் உறுதி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4