அவசரமாக கோட்டாபயவை தொடர்புகொண்ட இம்ரான் கான் பேசியது என்ன?

#SriLanka #Gotabaya Rajapaksa
Nila
4 years ago
அவசரமாக கோட்டாபயவை தொடர்புகொண்ட இம்ரான் கான்  பேசியது என்ன?

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது கவலையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை தொடர்புக்கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

”சியால்கோட்டில் பிரியந்த தியவதனவை கொன்றமை குறித்தான நமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் இலங்கை மக்களுக்கு தெரிவிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று பேசினேன்.

இது தொடர்பில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அவருக்குத் தெரிவித்தேன். மேலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குத் தொடரப்படும் என்று உறுதியளித்தேன்.” என இம்ரான் கான் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4