யாழ்ப்பாணத்தில் பயங்கரம் - எயிட்ஸ் நோயால் இனங்காணப்பட்ட 52 பேரில் 10 பேர் பலி - தொடரும் அவலம்.

Prasu
2 years ago
யாழ்ப்பாணத்தில் பயங்கரம் - எயிட்ஸ் நோயால் இனங்காணப்பட்ட 52 பேரில் 10 பேர் பலி  - தொடரும் அவலம்.

கலாச்சார சீர்கேடு யாழை ஆட்டிப்படைகும் வேழையில், இப்படி மேலும் அபாய நோய்களால் பாதிக்கப்படுவதும், பெரும் ஆத்திரத்தையும், கவலையையும் ஏற்படுத்திவருவதாக சமூக ஆர்வலர்களால் முறைப்பாடுகள் ஏற்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இனம் காணப்பட்ட 52 எயிட்ஸ் நோயாளர்களில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் , 7 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தற்போது 35 பேர் எய்ட்ஸ் நோய்க்கான யாழ் மாவட்டத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.

இவ்வாறு இனம் காணப்பட்ட பதினாறு பெண்களில் நான்கு பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது எயிட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ் மாவட்டத்தில் கர்ப்பவதிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கான எய்ட்ஸ் பரிசோதனை இடம்பெறுகிறது.

தாயிடமிருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் தாக்கம் ஏற்படாவண்ணம் அறிவதற்காக குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலை அடுத்த மாநிலங்களிலும் தொடர வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இது மாத்திரமல்லாமல், போதை பொருள் வியாபாரம், வினையோகம், பாவனையும் முன்னையதைவிட தற்பொழுது அதிகரித்திருப்பதும் குறிப்பிடதக்கது
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!